பூந்தமல்லியில் தொடர் மின்வெட்டு - கர்ப்பிணி பெண்களுக்கு இருட்டில் பரிசோதனை

பூந்தமல்லியில் அரசு நகர்ப்புற சமுதாய நல மையம் செயல்பட்டு வருகிறது இங்கு பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள ஏராளமான கர்ப்பிணி பெண்கள் தினந்தோறும் பரிசோதனைக்காக வந்து செல்வது வழக்கம்.

பூந்தமல்லியில் தொடர் மின்வெட்டு - கர்ப்பிணி பெண்களுக்கு இருட்டில் பரிசோதனை

 இந்த நிலையில் இங்குள்ள அரசு நகர்புற சமுதாய நல மையத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த காணப்படுவதால் டாக்டர்கள் இருட்டு அறையில் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து வருகின்றனர் குறிப்பாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்ய முடியாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அது மட்டும் இன்றி கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

மேலும் படிக்க | பொங்கல் சிறப்பு பேருந்து - போக்குவரத்துத்துறை அமைச்சர் நாளை ஆலோசனை!

சிலர் மருத்துவமனைக்கு வந்துவிட்டு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வீட்டிற்கு திரும்பி செல்கின்றனர் குறிப்பாக இந்த நகர்புற சமுதாய நல மையத்தில் ஜெனரேட்டர் வசதி இருந்தும் அது பழுதடைந்து விட்டதால் சரி செய்ய எடுத்து செல்லப்பட்டு இன்னும் சரி செய்ய முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால் அடிக்கடி இங்கு மின்தடை ஏற்படுவதால் இந்த நிலை நீடித்து வருவதாகவும்.

மேலும் படிக்க | சிவகங்கையில் 2 குழந்தைகளுக்கு டெங்கு - அதிரடி காட்டும் பேரூராட்சி நிர்வாகம்

இதே கட்டிடத்தில் பிரசவ அறையும் ஆபரேஷன் செய்ய அறையும் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவத்துறை அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.