பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - 2 பேர் பணி நீக்கம்...

தொலைநிலை கல்வி நிறுவனத்தில் கண் தொடர்பான மருத்துவ பாடம் துவங்கும் கோப்புகள் தொடர்பான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழக முறைகேடு - 2 பேர் பணி நீக்கம்...

சேலம் | பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் 250-க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக ராமன் பணியாற்றி வந்தார்.

இவர் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி தொலைநிலை கல்வியில் கண் பற்றிய மருத்துவ பாடம் துவங்க அனுமதி அளித்த கோப்பில் இவர் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பள்ளி மாணவன் யோகாவில் உலக சாதனை!!! கிராம மக்கள் பாராட்டு...

மேலும், கடந்த 2013-ம் ஆண்டு காலத்தில் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அப்போதையை இயக்குனர் குணசேகரன், உதவி பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பல்கலைக்கழகம் சாபிலும் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் தவறுகள் நடத்திருப்பது உறுதி செய்ததையடுத்து, ராமன், அன்பரசி ஆகியோரை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக ஆட்சிக்குழு துணை வேந்தருக்கு அதிகாரம் வழங்கியது.

மேலும் படிக்க | படபிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்கள்..! உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவு...!

இதனை தொடர்ந்து இந்த மாதம் 30-ம் தேதி பணி ஒய்வு பெற இருந்த ராமன் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல தொலைநிலை கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய தொகுப்பு ஊதிய பணியாளர் அன்பரசியும் பணி நீக்கம் செய்து துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

துணை பதிவாளர் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் என இரண்டு பேர் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி....! அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்கல்வித்துறை...!