மின்சாரம் தாக்கி பலியான யானை...!

மின்சாரம் தாக்கி பலியான யானை...!

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி பாலியான காட்டு யானையின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுபன்றி உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் அம்பை அடுத்த மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியிலுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தந்தத்துடன் கூடிய ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

இந்த நிலையில் அடிவாரப்பகுதிக்கு வந்த அந்த காட்டுயானை காலை 6 மணியளவில் அப்பகுதியிலுள்ள சுமார் 30 அடி உயரம் கொண்ட பனைமரத்தை வேரோடு  சாய்த்தபோது, எதிர்பாராத விதமாக பனைமரம் அருகில் சென்ற மின்சார வயரில் விழுந்தது. தொடர்ந்து அந்த மின்வயரில் யானை மிதித்தது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியத்தில் யானை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா, வனச்சரகர் நித்யா மற்றும் ஏ.எஸ்.பி.பல்பீர் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிரேன் உதவியுடன் லாரி மூலமாக மணிமுத்தாறு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானை உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட உள்ளது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா கூறுகையில், இறந்த யானைக்கு சுமார் 45 வயது இருக்கும், இ.டி.ஏ.எப் என்ற முறைப்படி வனப்பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றார். இதையடுத்து யானையை அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம்...! ஆளுநர் உரையுடன் தொடக்கம்..!