பாரம்பரிய வாழை ரகங்கள் குறித்த கண்காட்சி...!

பாரம்பரிய வாழை ரகங்கள் குறித்த கண்காட்சி...!

திருச்சியில் பாரம்பரிய வாழை ரகங்களின் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தியாவில் 30 மில்லியனும், தமிழகத்தில் 4 மில்லியனும் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பாரம்பரிய வாழை இரகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் வாழை இரகங்களை சந்தைப்படுத்துவது மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக திருச்சியில் இன்று தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ஏற்றுமதியாளர்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் வாழை ரகங்களின் கண்காட்சியும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் இடம் பெற்று இருந்ததை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.

இந்த கலந்துரையாடல் குறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி, மற்ற மாநிலங்களை காட்டிலும் 20 வகையான வாழை ரகங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சலுகைகள் குறித்தும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித்தரும் ரகங்களை பயிரிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளருக்கு சந்தைப் படுத்துதல் தொடர்பாக இந்த வாழை சார்ந்த கலந்துரையாடல் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கடலூர் : தனியார் நிறுனத்தில் வருமான வரித் துறை சோதனை..!