45 - வது நாளாக தொடரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்...

தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில், திமுக கொடி ஏந்தி பாபநாசம் அருகே 45வது நாளாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

45 - வது நாளாக தொடரும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்...

தஞ்சாவூர் | பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் 45 வது நாளாக, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின்
மாவட்ட செயலாளர் நாக முருகேசன் தலைமையில் திமுக கொடி ஏந்தி போராட்டத்தில் கரும்பு விவசாயிகள், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும்  தீர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | போராட்டம் செய்த 50 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

மத்திய மாநில அரசுகள் அறிவித்த முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கொடி ஏந்தி, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில்,

சர்க்கரை ஆலை நிர்வாகத்தை  தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் விவசாயிகளின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கவில்லை என்றால் தமிழக முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் இந்த பொங்கல் திருநாளை கருப்பு பொங்கல் தினமாக கொண்டாடுவது என்றும் ஆலை வாசல் முன்பு பொங்கல் வைத்து போராடுவோம் என்று கூறினார்கள்

மேலும் படிக்க | கண்ணில் கருப்புதுணி கட்டி கை குழந்தையுடன் போராடிய செவிலியர்கள்...