குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர் ...

சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ள நீர் ...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது இதனை அடுத்து முக்கொம்பு, கல்லணை, வழியாக கீழணை வந்தடைந்த உபரி நீரை கீழணையில் இருந்து அப்படியே கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்ட வருகிறது.

மேலும் படிக்க | மழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்...

குறிப்பாக நேற்று கொள்ளிடம் ஆற்றில் 2,18,160 கனடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 244 கன அடியாக குறைந்து வந்தாலும் கூட வெளியேற்றப்படும் உபரி நீரானது கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரைகளும் தொட்டவாறு செல்கிறது.

இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள மேல திருக்கழிப்பாளை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய தெரு, சின்ன தெரு, ரோட்டு தெரு, உள்ளிட்ட 5 தெருக்களில் உள்ள 350 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மேலும் படிக்க | வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்டம்...

நேற்று இரவு திடீரென குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் செய்வதறியாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதியில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேறிய கிராம பொதுமக்கள் கால்நடைகளுடன் சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை...

மேலும் கொள்ளிடத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் முதலை, பாம்பு, பூரான், உள்ளிட்ட ஜந்துக்களும் குடியிருப்பு பகுதியில் படையெடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக நேற்று இரவிலிருந்து சாலையில் தஞ்சம் அடைந்து இருக்கும் எங்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர்.

குறிப்பாக பழைய கொள்ளிடுமாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு கரை பகுதிகளிலும் தடுப்பு சுவர் அமைத்தால் மட்டுமே எங்களுக்கு வெள்ளக் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது என அந்த கிராம மக்கள் பிரதானகோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | உபரிநீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் அச்சம்... வெள்ளம் வருமா?