தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா....!!

தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா....!!

கரூர் அருகே கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்து பேசியுள்ளார்.

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.  முகாமில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.  மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

தொடர்ந்து கோவிந்தம்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வழங்குவது குறித்து, பொது மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்பு திட்டத்தின் கீழ் கோவிந்தம்பாளையம் ராஜவாய்க்கால் வழியாக பிரியும், கிளை ஓடைகள் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.  

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சித் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:  பட்டியல் சமூக மக்களை இழிவு படுத்தி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர்!!