குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும்; சிறுவர்கள் மனு!

குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும்; சிறுவர்கள் மனு!

ஏரியில் கழிவு நீர் கலப்பதாகவும், குடிக்க நல்ல தண்ணீர் வேண்டும் என்றும் அம்பத்தூர் வருவாய் குறைத்தீர் ஜமாபந்தி நிகழ்ச்சியில் சிறுவர்கள் மனு அளித்துள்ளனர்.

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி ஐ.ஏ.ஸ் மற்றும் வருவாய் தீர்வாக அலுவலர்கள் முன்னிலையில், நடைபெற்ற ஜமா பந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கொரட்டூரை சேர்ந்த குழந்தைகள் பேரணியாக வந்து கைகளில் புகார் மனுவை அளித்தனர். இனிவரும் காலங்களில் சுகாதாரமான குடிநீர் தேவை என்பதற்காக சிறுவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொரட்டூர் ஏரியில் கலக்கப்படும் கழிவுநீரை தடுக்க வேண்டும் என்றும் கூறினர். 

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழந்தைகளிடம் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி ஐ.ஏ.ஸ் அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க:காவல்துறை உங்கள் நண்பன்; நண்பன் கடையில் டீ குடித்தால் காசு கொடுக்க வேண்டுமா?