சர்க்கரை ஆலையில் 2023-ம் ஆண்டுக்கான அரவை தொடக்க விழா..!

சர்க்கரை ஆலையில் 2023-ம் ஆண்டுக்கான அரவை தொடக்க விழா..!

நாட்றம்பள்ளி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவ துவக்க விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான அரவைப் பருவ துவக்க விழா பூஜை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் மதியழகன் ஆகியோர் தலைமையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலரும் மேலாண்மை இயக்குனருமான மீனா பிரியா தர்ஷினி, துணை தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த 2022-23 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து பத்தாயிரம் மெகா டன்களும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து 15,000 மெகா டன்களும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சொந்த கரும்பு 105000 மெகா டன்களும் என மொத்தம் 130000 மெகா டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2022-23 ஆம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக டன் ஒன்றுக்கு 3065 ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டுயானை..! அச்சத்தில் பயணிகள்...!