தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம் திறப்பு...!!!

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலம் திறப்பு...!!!

தாம்பரத்தில் 10 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பால இணைப்பு பகுதி திறக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜிஎஸ்டி சாலையை கடக்க 2021 ல் 9 கோடி செலவில் நடை பாதை மேம்பாலம் அமைக்கப்படு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

மேலும் இந்த நடைமேடையினை ரயில்வே நிலையத்துடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து  இந்த நடை மேம்பாலத்தை ரயில் நிலையம் வரை  நீட்டிக்க வேண்டியும் மேலும்  10 கோடி மதிப்பில் டிக்கெட் கவுண்டருடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இன்று தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி  தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் துணை மேயர் காமராஜ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:   ஆடு, மாடுகள் கூட இந்த அரிசியை சாப்பிடாது.... வீடியோ வைரல்!!!