அதிகாரிகளின் அலட்சியத்தால் மெல்லச்சாகும் கொரட்டூர் ஏரி...

கொரட்டூர் ஏரியில் இரண்டு முறை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அவ்வப்பொழுது வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை இந்த ஏரியை கண்டு கொள்ளவில்லை என மக்களி மத்தியில் கேள்விகள் கிளம்பியுள்ளன.

அதிகாரிகளின் அலட்சியத்தால் மெல்லச்சாகும் கொரட்டூர் ஏரி...

திருவள்ளூர் : செங்குன்றம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொரட்டூர் ஏரியானது சுமார் 590 ஏக்கர் பரப்பளவில் கொளத்தூர் கொரட்டூர் அம்பத்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வந்தது. இந்த கொரட்டூர் ஏரி, கடந்த 2012 ஆம் ஆண்டுகளுக்கு முன் நன்னீர் ஏரியாக இருந்து வந்தது.

ஆனால், இந்த 10 ஆண்டுகளில் சுற்றுவட்டார பகுதியில் நீர் வளம் பாதித்துள்ளது. இதனால் ஏரியின் 590 ஏக்கர் முழுவதுமாக நச்சு கலந்த கழிவு நீரில் மிக அடர்த்தியான அடர் கருமை நிறத்தில் தற்பொழுது காட்சியளிக்கிறது.

மேலும் படிக்க | மக்களே உஷார்...குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...தேதி இதோ!

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 2 முறை  தமிழக முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க செங்குன்றம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதை அதிகாரிகள் காற்றில் பறக்க வைத்துள்ளனர்.

அதற்கான பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் தற்பொழுது பெய்த 3 நாள் வடகிழக்கு பருவமழைக்கு அம்பத்தூர் , தொழிற்பேட்டை அம்பத்தூர், பட்டரவாக்கம், கள்ளிகுப்பம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர் வடிகால்வாயில் கழிவு நீரானது கலந்து நேரடியாக  3 இடங்களில் கொரட்டூர் ஏரியில் கலக்கிறது.

மேலும் படிக்க | ஒற்றை மழைக்கு தாங்காமல் ஆட்டம் கண்ட காவல் நிலையம்..!

இதனால் அடர் கருமை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஏரி இனிவரும் காலங்களில் குடிநீர் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாமல் போவதற்கான 100 சதவீத சாத்திய கூறுகளோடு உள்ளது.  

செங்குன்றம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உதவி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக கொரட்டூர் ஏரியை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி நன்னீர் ஏரியாக மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் நீர்நிலை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்...! அவதிக்குள்ளான கிராம மக்கள்...!

மேலும், சென்னை மாநகரின் அபரிவிதமான அசுர வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், மாநகரில் உள்ள நீர் நிலைகளை மாசடைய வைத்தால் இனி வரும் காலங்களில் குடிநீருக்காக வரும் கால சந்ததியினர் கடினப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழக அரசு உடனடியாக கொரட்டூர் ஏரியில் கவனம் செலுத்தி குடிநீர் ஆதாரத்திற்கு பயன்படுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க |