லட்சக்கணக்கில் ஏற்றுமதியாகும் கோழி முட்டை!!!

லட்சக்கணக்கில் ஏற்றுமதியாகும் கோழி முட்டை!!!

முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது. 

தினந்தோறும் 6 கோடி முட்டைகளை உற்பத்தி செய்யும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து, தினந்தோறும் 40 லட்சம் முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதாக நாமக்கல் கோழி முட்டை ஏற்றுமதியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கேரளா ஸ்டோரி -டிஜிபி சுற்றறிக்கை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

6 கோடி முட்டைகளை தினமும் உற்பத்தி செய்யும் நாமக்கல் மண்டலம்தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், நாமக்கல் மண்டலம் தனி சிறப்பு பெற்றுள்ளது. அதன்படி, முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது

நாமக்கல், பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும் 6 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.