அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்...! ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்...!

அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்...! ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்...!

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஞானசேகரன். விவசாயியான இவர் தன்னுடைய மூன்று ஏக்கர் நிலத்தில் வாழை பயிர் செய்து வருகின்றார். சுமார் 11 மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் சில தினங்களில் வாழை அறுவடை செய்ய காத்திருந்தார்.

இந்த நேரத்தில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் ஞானசேகரின் விவசாய நிலத்தில் இருந்த வாழை மரங்கள் அனைத்தும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடைந்து சாய்ந்தது.

சுமார் 4000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், நெற்பயிர்கள் சேதமானதைக் கண்ட விவசாயி ஞானசேகரன் செய்வதறியாத திகைத்து வேளாண்மைதுறைக்கு தகவல் அளித்தார். அதன்படி வேளாண்மைதுறை அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஞானசேகரன் கூறும் போது, சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி என்னுடைய நிலத்தில் வாழை விவசாயம் செய்து வந்தோம். ஒவ்வொன்றும் சுமார் 8 முதல் 10 அடி உயரத்துக்கு குலை தள்ளியுள்ளது. புயல் சீற்றம் காரணமாக காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் குலை தள்ளிய அனைத்து வாழை மரங்களும் முறிந்து கீழே சாய்ந்துவிட்டது.

தை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில் சுமார் 4000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் நெற்பயிர் சேதம் ஆனதால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்து வருவதாக தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை வேளாண்மைதுறை அலுவலர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர். அதற்கு உண்டான நஷ்டத்தை உடனே வழங்கினால் தானும், தன்னை போன்ற விவசாயிகளும் மீண்டும் விவசாயம் செய்ய முன் வருவார்கள் என கூறினார்

இதையும் படிக்க : அயன் பட பாணியில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரை...! கென்யா நாட்டு பெண் கைது...!