மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள்...

பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் வலையில் மர்ம பொருள் ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள்...

திருவள்ளூர் | பழவேற்காடு அடுத்த அரங்கன்குப்பத்தை சேர்ந்த தில்தனபால் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் கடந்த 2நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றனர்.

கடலில் பிடித்த மீன்களை ஆந்திராவில் விற்றுவிட்டு நேற்றிரவு ஸ்ரீஹரிகோட்டா வழியே மீண்டும் வலையை வீசி மின்பிடித்து கொண்டு வீடு திரும்பினர்.

மேலும் படிக்க | வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்... மீனவர்களுக்கு எச்சரிக்கை...

இன்று காலை வலையில் சிக்கிய மீன்களை எடுத்த போது மர்ம பொருள் ஒன்று வலையில் சிக்கி இருந்தது தெரியவந்தது. தெர்மாகோலுக்குள் பேட்டரி, மின்னனு சாதனம், சிப், வயர் உள்ளிட்டவற்றை இணைத்து மர்ம பொருள் இருந்துள்ளது.

அதனுடன் கட்டப்பட்டு உடைந்த நிலையில் பலூன் ஒன்றும் இருந்துள்ளது. நேற்றிரவு ஸ்ரீஹரிகோட்டா அருகே வலையை வீசியதில் இந்த மர்மபொருள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சென்னை மற்றும் சுட்டுவட்டார பகுதிகளில் வானிலை முன்னறிவுப்பு...

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக தயாரித்து பயன்படுத்தப்பட்டதா அல்லது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட நிலையில் ஏதேனும் சதி வேலையா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னனு சாதனம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதால் அது சார்ந்த வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 5 நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியுடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்...