ரோட்டோரத்தில் சூடுபறக்கும் விற்பனை... வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் முகாம்...

ரோட்டோரத்தில் சூடுபறக்கும் விற்பனை... வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் முகாம்...

கிராமங்களில் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக இருந்த இரும்பு பட்டறை தொழில் நழிவடைந்து விட்டது. இந்நிலையில் வட மாநிலத்தவர்கள் ரோட்டோரத்தில் இரும்பு பட்டறை அமைத்துள்ளதால் வியாபாரம் சூடு பறக்கிறது.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால் விவசாய பணிகளுக்கு தேவையான மண்வெட்டி, கடப்பாரை, மரம் வெட்டும் கோடாரி பயன்பாடு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை கொண்டாடிட ரசிகர் விஷமருந்தி தற்கொலை....

இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் இரும்புப்பட்டறை அமைத்து விவசாய பணிகளுக்கு தேவையான உபகரனங்களை தயாரித்து விற்பனை செய்தனர். விவசாயப் பணிகளுக்கு நவீன உபகரணங்கள் வர துவங்கி உள்ளதால் அறரிவாள், கடப்பாரை, கோடரி போன்றவற்றின் தேவையும் குறைந்துவிட்டதால், கிராமங்களில் இருந்த இரும்பு பட்டறைகள் காலியாகிவிட்டன.

தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்று தொழில் தேடி சென்று விட்டனர். இதனால் விவசாய பணிகளுக்கான இரும்பு உபகரணங்களை சாணை தீர்க்கவும், முனை பிடிக்கவும் முடியாமல் விவசாயிகள் அலைமோதுகின்றனர். இந்நிலையில் இரும்பை சூடேற்றி தேவையான வடிவத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரமக்குடி பகுதியில் முகாமில் உள்ளனர்.

மேலும் படிக்க | “என் மகளை மீட்டுத் தாருங்கள்”... மனைவியுடன் அதிகாரியிடம் கெஞ்சிய ஆட்டோ டிரைவர்...

கிராமம், நகர் பகுதியில் ரோட்டோரத்தில் முகாமிட்டு கத்தி, அரிவாள், கடப்பாரை போன்ற உபகரனங்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் கொண்டுவரும் பழைய உபகரணங்களுக்கு முனை வைத்து கொடுக்கின்றனர். பெரும்பாலும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மூன்று முதல் ஐந்து குடும்பங்களாக சேர்ந்து பட்டறை அமைக்கின்றனர்.

அதே பகுதியில் குடில் அமைத்து ஒரு வாரத்திற்கு முகாமிடுகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் இரும்பு ஆயுதங்களை சீரமைத்து கொடுப்பதால் ரோட்டோர பட்டறைகள் பிசியாகிவிட்டன. வியாபாரம் சூடு பறக்கிறது.

இது குறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறுகையில்...

வயிற்று பிழப்புக்காக தெரிந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். தொழிலில் பெரிதாக லாபம் கிடைக்க விட்டாலும் கிடைக்கும் வருவாய் கொண்டு வாழ்கிறோம். தினமும் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனை ஆகிறது. ஒரு கிராமத்தில் வியாபாரம் மந்தமாகும் போது வேறு கிராமத்துக்கு செல்வோம் என்கின்றனர்.

மேலும் படிக்க | கஞ்சா விற்பனைக்கு கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் வெளிமாநிலத்தவர்கள்