கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்...!

திருமங்கலம் அருகே கிராமத்தில் உள்ள கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு அமர்ந்து மக்கள் தர்ணா போராட்டம்

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்...!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள A.தொட்டியப்பட்டி கிராமத்தில் ஊரணி அருகே ஐயப்ப சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் நீர்நிலைப் பகுதியில் கட்டப்பட்டிருப்பதாக கூறி தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் நீதிமன்றத்தில் மனு அளித்ததை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து இன்று வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று தொட்டியபட்டி கிராமம் ஊரணியின் அருகே உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் இடிப்பதற்காக சென்றனர். 

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கோவிலை இடிக்க கூடாது என அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு அமர்ந்த தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் கோவிலை இடிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் கோவிலை இடிக்க முற்படுவதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.