மதுரை மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்...

அரசு உதவிபெறும் மகளிர் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டம் நடந்தது.

மதுரை மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்...

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு திருவிழாவான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு பள்ளி கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள என்எம்ஆர் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, புதுப் பானையில் பொங்கல் வைத்து செங்கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள் வைத்து படையலிட்டனர். 

மேலும் படிக்க | ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்களின் படம் வெளியாகி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரே குஷி...

கிராமங்களில் பெண்கள் அணியக்கூடிய கண்டாங்கி சேலை அணிந்து, 33 அலங்கரிக்கப்பட்ட மண்பானைகளில் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டாம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.

இதனை தொடர்ந்து மாணவிகள் சினிமா பாடல்களுக்கும், கிராமிய பாடல்களுக்கு ஏற்றவாறு ஆட்டம் ஆடி பாட்டு பாடி உற்சாகமாக கொண்டாடினர். கல்லூரியில் தோழிகளோடு சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்

மேலும் படிக்க | சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவுப்பு...! சென்னையில் இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்...!