அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...

செங்கம் சுற்றும்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...

திருவண்ணாமலை | வட நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் செங்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்து பராமரித்து தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக பெய்த தொடர் கனமழையால் நெல் பயிர் நீரில் மூழ்கி நெல்மணிகள் வீணாகி போனதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடன் வாங்கி முதலீடு செய்த நெற்பயர்கள் நீரில் மூழ்கி வீணாகிப் போனதை துறை சார்ந்த அதிகாரிகள் பகுதி வாரியாக நேரில் ஆய்வு செய்து விவசாயிகள் நலன்கருதி அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க | குழந்தை திருமணம் வேண்டாம்... படிக்க வையுங்கள்... - மாவட்ட ஆட்சியர்!