ரூ.28 கோடியில் புதிய மேம்பால பணி பூஜையுடன் தொடக்கம்...

திண்டிவனம் அருகே 28 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலப் பணிகளை செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியர் அலி மஸ்தான் துவக்கி வைத்தார்.

ரூ.28 கோடியில் புதிய மேம்பால பணி பூஜையுடன் தொடக்கம்...

விழுப்புரம் | திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டியில் உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நான்கு முனை சந்திப்பில்  ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது.

குறிப்பாக அலுவலக மற்றும் பள்ளி நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: இரண்டு வழி சோதனை நிறைவு

இந்நிலையில் இந்த பகுதியில் ரூபாய் 28 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள்  துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியர் அலி மஸ்தான் கலந்துக் கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானோர்  கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில் திட்டம்..... கடனுதவி வழங்கிய ஆசிய வளர்ச்சி வங்கி!!!