20 ஆண்டுகளாக நடக்கும் கொடுமை... தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்....

மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்த தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அமைச்சர் தொகுதியில் 20 ஆண்டுகளாக கொடுமை நடப்பதாக குற்றச்சாட்டுகள் நடந்து வருகிறது.

20 ஆண்டுகளாக நடக்கும் கொடுமை... தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்....

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுவிஜய். 36 வயது மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் வழியாக தேவகோட்டை செல்லும் தனியார் பேருந்தில் முதல் நபராக ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய நபரை நடத்துனர் பழனிமுருகன், ஓட்டுனர் மூர்த்தி இருவரும் இறக்கிவிட்டு தேவகோட்டை, காரைக்குடி பயணிகளிடம் பைகளை வாங்கி சீட்டுகளில் இடம்பிடித்து கொடுத்து அவர்களை அமர வைத்துள்ளனர். இருக்கைகள் நிரம்பியவுடன் பின்னர் திருப்பத்தூர் பயணிகளை ஏற அனுமதித்துள்ளனர்.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளியை நீண்ட நேரம் காக்க வைத்த வைரல் வீடியோ...+

சேதுவிஜய் தன்னை மாற்றுத்திறனாளி என கூறியும், இவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 70 கி.மீ வரை நின்றுகொண்டே வந்துள்ள சேதுவிஜய் இது குறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு அதே பேருந்தில் ஏறி திருப்பத்தூர் வரை நின்றுகொண்டே வந்துள்ளார்.

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்குள் தனியார் பேருந்து வந்ததும் சேதுவிஜய் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேருந்தை சிறைபிடித்தனர். பின்பு தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் ஓட்டுநர் மற்றும் நடத்தும் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மேலும் படிக்க | அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண விபரம் குறித்த அறிக்கை ...!

அதன் பின்னர் சேதுவிஜயுடன் அவரது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டது. பின்பு காவல் ஆய்வாளர் விசாரணையை மேற்கொள்வதாக உறுதி அளித்த பின்பு சேதுவிஜய் புகார் அளித்துவிட்டு நண்பர்கள், பொதுமக்களுடன் கலைந்து சென்றார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் இச்சம்பவத்திற்கு இன்றுவரை முடிவு கிட்டவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | புதுச்சேரி ஆளுநரை மக்கள் நேரில் சந்திக்கலாம்...ஆளுநர் மாளிகை அறிவிப்பு!