50 கிலோ எடையுள்ள கற்களை மார்பில் உடைத்து மாணவர்கள் சாதனை...!!!

50 கிலோ எடையுள்ள கற்களை மார்பில் உடைத்து மாணவர்கள் சாதனை...!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இன்று நடந்த கராத்தே சாகச நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மார்பு மீது 200 கிலோ எடையுள்ள மோட்டார் சைக்கிளை ஏற்றியும்,மார்பின் மீது 50கிலோ எடையுள்ள கற்களை வைத்து உடைத்தும் சாதனை படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பேயோடு பகுதியில் ஜப்பான் சிட்டோ ரியோ கராத்தே டோ கான் இந்தியா அமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளுக்கு இன்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன, இதில் இன்று 15 வயது பள்ளி மாணவன் தன் மார்பு மீது சுமார் 200 கிலோ எடையுள்ள புல்லட் மோட்டார் சைக்கிளை ஏற்ற செய்து பார்ப்போர்களை அதிர்ச்சி அடைய செய்து சாதனை புரிந்துள்ளான்.  

மேலும் நெஞ்சின் மீது கற்களை வைத்து அதனை பெரிய சுத்தியலால் அடித்து உடைத்தும் சாதனை புரிந்தனர்.  மேலும் இது தவிர கட்டா, கும்தே, தனித்திறன், குழு போட்டி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர்கள் கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர் அவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிக்க:  கும்பாபிஷேக விழாக்கள்... சாமி தரிசனம்!!