இந்த பிரச்சனைக்காக 15 ஆண்டுகள் கோவில் திறக்கப்படவில்லையா..? கோரிக்கை வைக்கும் கிராம மக்கள்...!

இந்த பிரச்சனைக்காக 15 ஆண்டுகள் கோவில் திறக்கப்படவில்லையா..? கோரிக்கை வைக்கும் கிராம மக்கள்...!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நேசநேரி கிராமத்தில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி - வாலகுருநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான திருக்கோவிலாகும். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, இத்திருக்கோவிலில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே திருவிழாவின் போது ஒலி பெருக்கி அமைத்து, ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு பாடலை ஒலிக்கச் செய்ததால் ஏற்பட்ட தகராறில் கோவில் மூடப்பட்டது. 

இதனை தொடர்ந்து, திருக்கோயிலை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இக்கோயிலுடைய பக்கவாட்டு சுவர் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, கோவிலினுள் புகுந்து மது உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கோவிலில் உள்ள சிலைகள் சில காணாமல் போய் உள்ளதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இத்திருக்கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தனிநபர் அபகரித்து சுய லாபம் ஈட்டி வருவதை தடுத்து நிறுத்த கோரியும், தமிழக அரசு திருக்கோவிலை உடனடியாக திறந்து, மாயமான சிலைகளை மீட்டுகவும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.