சென்னையில், 400 கோடி ரூபாய்க்கு நவீன கழிவறைகள்...

சென்னையில் மூன்று மண்டலங்களில் 372 இடங்களில் ரூ. 429.73 கோடி மதிப்பீட்டில் நவீன கழிவறைகள் அமைக்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

சென்னையில், 400 கோடி ரூபாய்க்கு நவீன கழிவறைகள்...

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் மெரினா கடற்கரை அமைந்துள்ள மண்டலம் 9 ஆகிய மூன்று மண்டலங்களில் 372 இடங்களில் ரூ. 429.73 கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் சோதனை முறையில் பொது கழிப்பிடங்கள் கட்ட மாமன்றத்தில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. 

மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு ஒராண்டு காலத்திற்குள் கட்டட பணிகள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கழிவறைகளை 8 ஆண்டு காலங்கள் பராமரிக்கவும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர் ஆய்வு!

புதிதாக அமைக்கப்படவுள்ள 372 பொது கழிப்பிட வளாகத்திற்கும் வெளியே சிசிடிவி கேமராக்கள் அமைத்து கட்டுப்பாடு அறைகளுப் அமைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வகையிலான வசதிகளும், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கட்டட அமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன வசதிகளுடன் கூடிய பொது கழிப்பிடங்கள் அமைப்பதற்கு மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரூ.320கோடி மதிப்பீட்டில் நந்தனத்தில் மெட்ரோ நிறுவனத்தின் தலைமையகம்..!