மூன்று நாளில் கரை திரும்ப வேண்டியது.. 75 நாட்களாகியும் தகவல் இல்லை..!

மூன்று நாளில் கரை திரும்ப வேண்டியது.. 75 நாட்களாகியும் தகவல் இல்லை..!

உறவினர்கள் கோரிக்கை

பக்ரின் நாட்டில்  மீன்பிடிக்க சென்ற  குமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் குறித்து 75 நாட்களாகியும் இதுவரை எந்த தகவலும் இல்லாததால் அவரது உறவினர்கள் இன்று குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து காணாமல் போன தங்கள் உறவினரை கண்டுப்பிடித்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர். 

மீனவர்கள் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சகாய செல்சோ ( வயது  37) ஆன்றனி வின்சென்ட் ( வயது 33)  இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பக்ரின் நாட்டில் உள்ள மொராக் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக ஆள் கடலுக்குச் சென்றார்கள் மூன்று நாட்களில் மீன்பிடித்து விட்டு திரும்பி கரை வர வேண்டிய இவர்கள் மேலும் 75 நாட்களாகியும் இதுவரையிலும் கரை திரும்பவில்லை.

மேலும் படிக்க | மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி.. முதல் போட்டியிலேயே கலக்கிய தூத்துக்குடி மாணவர்கள்..!

ஆட்சியரிடம் மனு

பக்ரின்  நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் கடல் பகுதியில் முழுவதும் தேடி அவர்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் குறித்து எந்த வித தகவல்களும் கிடைக்கப்படாத நிலையில் இரண்டு மீனவர்களை இழந்து நிற்கும் இந்த இரண்டு குடும்பங்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியில் இருக்கிறது. இதனால் காணாமல் போன இரண்டு மீனவர்களையும் மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு கண்டுபிடித்து தரவேண்டும் என உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.