நியாய விலை கடைகளில் தரம் இல்லாத அரிசி...மக்கள் குற்றச்சாட்டு!

நியாய விலை கடைகளில் தரம் இல்லாத அரிசி...மக்கள் குற்றச்சாட்டு!

கால்நடைகள் கூட உண்ண முடியாத அரிசியை நாங்கள் எப்படி உண்ண முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

தரமில்லாத அரிசி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட துலுக்கன்குளத்தில்  பொதுமக்களுக்கு  இலவச அரிசி நியாய விலை  கடையில்  வழங்கப்பட்டது  அந்த அரிசியில் வண்டுகள், மற்றும் பூச்சிகள் உள்ளதாகவும், தரம் இல்லாமல் இருப்பதாகவும்,  கால்நடைகளுக்கு கூட கொடுக்க முடியாத அளவிற்கு அரிசியின் தரம் இருப்பதாகவும், இந்த அரிசியை நாங்கள் எப்படி சமைத்து சாப்பிட முடியும் என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்கள் கோரிக்கை

அன்றாட கூலி வேலைக்கு செல்லும் நாங்கள், 60 ரூபாய் 80 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கி சாப்பிட முடியாது எனவும், தொடர்ந்து துலுக்கன்குளம் நியாய விலை கடைக்கு வரும் ரேஷன் அரிசி தூசி யாகவும், குப்பையாகவும்  தரமற்றதாக இருப்பதாகவும், தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.