தடை மீறி நடைபெறும் சேவல் சண்டை...

காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவி சட்டவிரோத சேவல் சண்டை நடந்ததால், அது குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடை மீறி நடைபெறும் சேவல் சண்டை...

திருப்பத்தூர் | திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் லட்சங்கள் புரளும் கோழி சண்டை நடைபெற்று வருகிறது. 

இந்த கோழி சண்டை சூதாட்டத்திற்கு பெங்களூரு ஓசூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோழிகளை சண்டை விட்டு ஆதாயம் பெற்று வருகின்றனர். மேலும் கோழி சண்டையின் மூலம் சுமார் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை இந்த கோழி சண்டை நடைபெற்று வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.

சூதாட்டத்தைக் குறைக்கவும், மிருக வதையைத் தடுக்கவே இது போன்ற சட்டங்கள் மற்றும் தடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதை யாவையும் மதிக்காமல் இது போன்ற தகாத செயல்களால் மக்களின் வாழ்வு பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

மேலும் படிக்க | மகா தேரோட்டத்தை தொடர்ந்து...மகா தீபம் எப்போ? ஆவலுடன் பக்தர்கள்!!