வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனம் மோதி உதவி ஆய்வாளர் படுகாயம்

வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனம் மோதி உதவி ஆய்வாளர் படுகாயம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவர்  மீது மோதியதில் விபத்துக்குள்ளனார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் வாகன சோதனையில் பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவகுமார் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது பண்ருட்டியில் இருந்து காடாம்புலியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு மாணவர்களை அவர் நிறுத்த சொன்னார். ஆனால் மாணவர்கள் வேகமாக வந்த நிலையில் வாகனத்தை நிறுத்த முடியாமல் காவல்துறையினரை பார்த்து பயந்து மிக வேகமாக வாகனத்தை இயக்கி உதவி ஆய்வாளர் மேலே இடித்தனர். உதவி ஆய்வாளர் சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் சிவக்குமார் படுகாயம் அடைந்த நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாகனத்தில் வந்த இரண்டு மாணவர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பண்ருட்டியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர்கள் யோகராஜ் வயது 17, நல்லசிவம் வயது 17, ஆகியவர்கள் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. காவல்துறை உதவி ஆய்வாளர் மீது வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.