கட்டபொம்மன் நினைவிடத்தில் வைகோ!

கட்டபொம்மன் நினைவிடத்தில் வைகோ!

ஆங்கிலேயருடன் சண்டையிட்ட கட்டபொம்மன் 223 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் கட்டபொம்மன் சிலைக்கு இன்று காலையில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர். அரசு சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மணிமண்டபத்தில் இருக்கும் கட்டபொம்மன் திருவுருவ சிலை  மற்றும் நினைவு ஸ்ப்தூபிக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அங்குள்ள வருகை பதிவேட்டில் வைகோ கையேழுத்துயிட்டார்.  இதில் மதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிறைவைக்கப்பட்ட இடம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என அரசுக்கு  கோரிக்கை வைக்கப்படும் என்றார்.