”பாரதியாரின் சொல்லுக்கேற்ப இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கோலோச்சி இருக்கிறார்” - முக. ஸ்டாலின்..

”பாரதியாரின் சொல்லுக்கேற்ப  இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கோலோச்சி இருக்கிறார்” - முக. ஸ்டாலின்..

சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மேடையில் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- 

"பட்டங்கள் ஆள்வது சட்டங்கள் சொல்வதும்"
என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள்  காட்டி இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கோலோச்சி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா, இதே பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். நானும் இதே பல்கலை. யில் தான் படித்தேன். ஒரு சீனியராக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சி. நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பை சென்னை பல்கலைக்கழகம் இருந்தது.

இன்றைய தினம் தமிழ்நாட்டின் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர் கல்விகளில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் உள்ளன, தலை சிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன.

மற்றும், தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன, தலைசிறந்த வேளாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன. மருத்துவ கல்லூரி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன 40 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன.

மேலும், 30 சட்ட கல்லூரியில் 2 தமிழ்நாட்டில் உள்ளன, 30 கட்டிடக்கலை கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ள இப்படி நான் அடுக்கிக்கொண்டே போக முடியும் கல்வியில் சிறந்த மாநிலமாக நம் உயர்ந்திருக்கிறோம்.

நூறாண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கு காரணம் பள்ளிக்களை வளர்த்தார் பெருந்தலைவர் காமராஜர்.  நம்முடைய திராவிட கட்சிகள் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.  கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து என்றும் அனைத்து மாணவர்களுக்கு உரிய வழிகாட்டி தனி திறமை வளர்த்தெடுத்து வருகிறோம்.

 தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களை படைப்பது மட்டும் இல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் சிறந்து விளங்கி வருகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறனை மேம்படுத்துவது தான் இந்த திட்டத்தினுடைய இலக்கு.
 
மாணவர்களுக்கு மட்டும் இல்லாத ஆசிரியர்களுக்கும் அவர்கள் துறை சார்ந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் இந்த திட்டத்திற்கு திறன் மேம்பாட்டு வளர்சிக்காக வழங்கப்படுகிறது, பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை புதிய ஆராய்ச்சி சிந்தனைகளுக்கு வழங்கும் விதமாக முதலமைச்சரின் ஆராய்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வரலாறு எதிர்கால இலக்கு பொருளாதார வளர்ச்சி தொழில் சார் சிந்தனைகளை ஏற்ப தனித்துவமான மாநில கல்வி கொள்கை வடிவமைப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகள் திறன் சார்ந்த தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்யும் பொருட்டு மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

இன்று பட்டம் பெறுகின்ற அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் எனக் கூறினார்.

” தொட்டனைத் தூறும் மணற்கேணி  மாந்தர்க்கு

     கற்றனைத் தூறும் அறிவு”

 உங்களின் அறிவு தோண்ட தோண்ட ஊற்று நீர் கிடைப்பது போல தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

பட்டம் வாங்கியதும் படிப்பு முடிந்து விடுவதில்லை ஒரே பட்டத்தோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து படித்து தகுதியான வேலை கிடைக்கும்.  முதலமைச்சராக மட்டுமல்ல உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவனாக உங்களை பார்த்து பெருமை கொள்கிறேன் என்றும் உங்கள் குடும்பத்திற்கு பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள நீங்கள் எதிர்காலத்தில் நமது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இதேபோல பெருமை தேடித்தர வேண்டும். அதுதான் நான் உங்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள்”,  என்றார்.

இதையும் படிக்க   |  கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு...! தவறான சிகிச்சை தான் காரணமா?