2023-க்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சி...! இரண்டாம் பதிப்பை தொடங்கி வைத்த அமைச்சர் ...!

2023-க்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சி...!  இரண்டாம் பதிப்பை  தொடங்கி வைத்த அமைச்சர் ...!

சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சாரம் மையத்தில் 2023-க்கான அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சி இரண்டாம் பதிப்பை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

மேலும், இந்த நிகழ்ச்சியில்தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் என் அவ்தீவ், சென்னை ரஷ்ய மாளிகையின் இயக்குனரும் துணை தூதருமான ரோகலேவ் மற்றும் ஸ்டடி அப்பார்ட் எஜுகேஷனல் கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கல்வி கண்காட்சியில்  மாணவர்களுக்கு விருப்பமான இளங்கலை மற்றும் முதுகலை படைப்புகளுக்கு கண்காட்சியில் ஸ்பாட் அட்மிஷன் வழங்கபட்டு வரு கிறது. 2023-24  கல்வி ஆண்டிற்கான இளங்கலை முதல் முதுகளை படிப்புகளுக்கு 2023 செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவில் தொடங்கிறது. 

ரஷ்ய கல்விக் கண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம் | Russian Education Fair  begins today in Chennai - hindutamil.in

இந்த கல்வி கண்காட்சி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கல்வி கண்காட்சியில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவ படிப்பில் சேர நூற்றுக்கணக்கான மாணவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

கல்வி கண்காட்சியை தொடங்கிய உடனே பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பினை பயில முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தனர் மாணவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அட்மிஷன் பதிவை வழங்கினார். இந்த கல்வி கண்காட்சி  மதுரையில் ஜூன் 20 ஆம் தேதி, திருச்சியில் 21ஆம் தேதி, சேலத்தில் 22ஆம் தேதி, கோயம்புத்தூரில் 23ஆம் தேதி   நடைபெற உள்ளது

மேலும், இந்த கண்காட்சியில் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம், குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம் , மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல்கலைக்கழகம் பங்கேற்று உள்ளது.

இதையும் படிக்க   |  ஆதார் உடன் பான் எண்ணை இணைக்க இறுதி காலக்கெடு!