MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

2023-2024 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கான கலந்தாய்வு   25.07.2023 (நாளை) செவ்வாய் கிழமையன்று   தொடங்குகிறது.

இந்த ஆண்டு சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது

பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற  உள்ளது.  தமிழகத்தில் 2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சிறப்பு பிரிவு மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. 

2023-2024 ஆம் கல்வி ஆண்டின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 40200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7. 5% அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படை வீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 420 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 6326, பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பிடிஎஸ் இடங்கள் 1768, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க    | புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு; விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!