இந்தி மொழித் தேர்வு கட்டாயம் - சு.வெங்கடேசன் கண்டனம்.

இந்தி மொழித் தேர்வு கட்டாயம் -  சு.வெங்கடேசன் கண்டனம்.

இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை தேசிய தேர்வு முகமை கடந்த 17-ம் தேதி அன்று வெளியிட்டது கண்டனத்திற்குரியது”,  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க   | என்னது நிலவில் இருக்கும் மண் நம்ம ஊர்ல இருக்கா?.... நாமக்கல் மண்ணில் நடந்த லேண்டர் சோதனை