கல்வி நிறுவன அலுவலர்களுக்கு இந்தி கட்டாயம்; திரும்பப் பெற்றது மத்திய அரசு!

கல்வி நிறுவன அலுவலர்களுக்கு இந்தி கட்டாயம்; திரும்பப் பெற்றது மத்திய அரசு!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கான தேர்வில் இந்தி மொழி கட்டாயம் என்பதை மாற்றியமைத்து புதிய சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஐஐடி என்ஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் பணிக்கான தேர்வு கடந்த ஜீன் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வில் இந்தி மொழி மற்றும் ஆங்கிலத்திற்காக 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இந்தி பேசாத மொழி மக்களிடம் இந்தியை கட்டாயப்படுத்தி மத்திய அரசு திணிப்பதாக குற்றாசட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த அறிவிப்பை மாற்றி தேசிய தேர்வு முகமை சுற்றிக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பில்  இந்தி மற்றும் ஆங்கிலம் என்பதற்கு பதிலாக இந்தி அல்லது ஆங்கிலம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Image

இந்த அறிவிப்பை வரவேற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் வெளியிடுள்ள அறிவிப்பில், "என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம். எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:திமுக தலைமைக்கு தொடர்ந்து தலைவலியை உருவாக்கும் மேயர்கள்!