எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்; இன்று வெளியீடு!

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்; இன்று வெளியீடு!

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36, 206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. சென்னை கிண்டியில் இன்று காலை 10 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார். அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. 

இதுதொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5 மற்றும்  6 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் கூறப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 31 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ள மருத்துவக் கலந்தாய்வு குழு, சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:பொது இடங்களில் பெண்களின் புகைப்படம்; ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை; வாலிபர் கைது!