" தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் " - அமைச்சர் கணேசன் பெருமிதம்.

" தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் " -   அமைச்சர் கணேசன் பெருமிதம்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் தனியார் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் குன்னுார் தனியார் கல்லூரியில்  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில்  தொழிலாளர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர்
முகாமினை துவக்கி வைத்தனர்.

 இந்த முகாமில்  பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவிகள் 3000 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  தனியார் நிறுவனங்கள் சார்பில்  தகுதியுடைவர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு  பணியாணையை அமைச்சர் வி.வெ.கணேசன்  வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் .  

இதனைத் தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பேசுகையில் 
வேலை வாய்ப்பு முலம் தமிழ்நாடு முழுவதும் 1,50 லட்சம்
பேருக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளது என்றும்,  இதுவரை 102 மெகா வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித்,
தலைமை வகித்தார். தொழிலாளர் துறை ஆணையர் வீரராகவன்,
உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேசன், உட்பட அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க     | ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்க,... உரிய ஊதிய உயர்வு வழங்குக " - சீமான்