ஜூலை 4 முதல் நேரடி மாணவா் சோ்க்கை!

ஜூலை 4 முதல் நேரடி மாணவா் சோ்க்கை!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாிகளில் வரும் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நேரடி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும் கல்லூாி கல்வி இயக்குனா் தொிவித்துள்ளாா்.

தமிழ் நாட்டில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25 ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.  
 
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்தக் கலந்தாய்வில்   மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

முதல்முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்தப் பின்னர் வேறுக் கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குனரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றப்பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25  ஆயிரத்து 253 மாணவிகள் ஆவார்கள். 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!

அதனைத் தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி முதல் 20 ந் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31621  பேரும்,
மாணவிகள் 44190 பேரும் சேர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு கல்லூரியின்  தரவரிசை அடிப்படையில் இனவாரி ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஜூலை 4 ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 5ஆம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், ஜூலை 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க || "சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல", விஞ்ஞானி நம்பி நாராயணன்!