அட்லி - ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் லயன் ?... இணையத்தில் கசிந்து வரும் புதிய தகவல்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அட்லி - ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் லயன் ?... இணையத்தில் கசிந்து வரும் புதிய தகவல்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக அட்லி உயர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். 

அண்மையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ஷாருக்கான், நயன் தாரா, பிரியாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன் தாரா நடித்து வருகிறார். ஷாருக்கான் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதில் படத்தின் பெயர் 'லயன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.