கணவருடன் கருத்து வேறுபாட? சமூக வலைதளங்களில் கணவரின் குடும்ப பெயரை நீக்கிய நடிகை சமந்தா...

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தனது கணவரின் நீக்கியுள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

கணவருடன் கருத்து வேறுபாட? சமூக வலைதளங்களில் கணவரின் குடும்ப பெயரை நீக்கிய நடிகை சமந்தா...

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா (Samantha Akkineni) திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். அத்துடன், நடிகை சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் (Naga Chaitanya) குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.

 இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது 'S'என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.

 திடீரென டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதற்கு எந்த காரணமும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் கணவருடன் கருத்து வேறுபாடு, கணவரை பிரியப் போகிறாரா சமந்தா, இதற்கு ஆரம்பமாக தான் தனது பெயரை மாற்றி உள்ளாரா என்று ரசிகர்கள் குழபப்தில் உள்ளனர்.