போயஸ் கார்டனில் ரஜினியை நேரில் சந்தித்த அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படம்

போயஸ் கார்டனில் ரஜினியை நேரில் சந்தித்த அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், அவரது மகள் அதிதியை நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். அதுவும் இவர் அறிமுகமாகும் முதல் படமே பிரம்மாண்ட கூட்டணியில் உருவாக உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் நடிகர் கார்த்திக் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். 

தற்போது இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படத்திற்கு விருமன் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் தான் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளார். இதன் மூலமே அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். 

சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ள அதிதிக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய அதிதி அவரிடம் ஆசி பெற்றுள்ளார். நடிகர் ரஜினியும், அதிதியும் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.