'தி கிரே மேன்' திரைப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி - மகன்களுடன் கலந்துகொண்ட தனுஷ்..!

ஹாலிவுட்டில் நடித்துள்ள நடிகர் தனுஷின் 'தி கிரே மேன்' திரைப்படம் வருகிற ஜூலை 22 ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ், அவரது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தி கிரே மேன்' திரைப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி -  மகன்களுடன் கலந்துகொண்ட தனுஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ், தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். முன்னதாக அத்ரங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர், அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்,  அவென்ஜர்ஸ் : எண்டு கேம், கேப்டன் அமெரிக்கா போன்ற படங்களை இயக்கிய ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கும் தி கிரே மேன் திரைப்படத்தில் 'அவிக் சன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் படத்தின் அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். அதில், இவரது கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்னதாக அவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்ப்பட்டதாகவும் அவர் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தி கிரே மேன் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. அப்போது வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தனுஷ், " ஹாலிவுட் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு ஒரு சிறந்த நேரம் கிடைத்தது . இந்தியத் திரையுலகில் சுமார் 50 படங்கள் - 22 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த நேரத்தில், ஒரு புதிய நபரைப் போல என்னைப் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது " என கூறினார். அந்த ப்ரீமியர் நிகழ்ச்சியில், தனுஷ், அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.