கதை கேட்பதாக கூறி மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ள குக்வித் கோமாளி அஸ்வின்!!

மூட் ஆப் - னு சொல்லி வர மறுத்த அஸ்வின்...

கதை கேட்பதாக கூறி  மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ள குக்வித் கோமாளி அஸ்வின்!!

குக்வித் கோமாளியில் பிரபலமான அஸ்வின் கதை கேட்பதாக இயக்குனரை வரவழைத்து  நாளை கதைக்கேட்கிறேன் என்று சொல்லி அவமானபடுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி ஷோ மக்களிடம் பெரிய அளவில் ரீச்சானது. அந்த ஷோவில் பங்குபெற்ற போட்டியாளர்களில் அஸ்வினுக்கு  மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல், அவருக்கென்று தனி செட் ஆப் பேன்ஸ் பேஜ் கிரியேட் ஆயி இருந்துச்சு. இதனைதொடர்ந்து, சமீபத்தில் நடந்த ’என்ன சொல்ல போகிறாய்’நிகழ்ச்சியில் மேடையில் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 40 கதைகள் கேட்டிருக்க. ஆனால், கதை கேட்கும்போது பாதியிலேயே தூங்கிடுவேன். ஆனா இந்த கதை கேட்கும் போது தான் தூங்கல அதுக்காக தான் இந்த படம் பன்றேன் என அஸ்வின் பேசியது மிகப் பெரிய கான்டரவசியாக நெட்டிசன்கள் மத்தியில் பேசப்பட்டது. தொடர்ந்து, அவர் பேசியதை வைத்து செம்ம கலாய் கலாய்த்தனர். இதுவே இன்னும் முடியாத நிலையில், அடுத்ததாக அஸ்வின் பற்றிய சர்ச்சையை எழுந்துள்ளது.

ஆமாங்க, ஒரு பெரிய ப்ரொடக்‌ஷன் டீம் தயாரிப்பு நிறுவனத்துல இருந்த ஒரு இயக்குனர் கிட்ட கதை கேட்டுருக்காங்க. அந்த இயக்குனர் சொன்ன கதை புடிச்சு போன ப்ரொடக்‌ஷன் டீம் இந்த கதைய குக்வித் கோமாளி அஸ்வின் பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லிருக்காங்க.

 

இந்நிலையில், அஸ்வினுக்கு கால் பண்ணி கதை கேக்குறிங்களா என கேட்டபோது, அதற்கு அஸ்வின் ஒரு குறிப்பிட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இந்த ரூம் நம்பரை புக் பண்ணுங்க அங்கதான் நான் கதை கேட்பேனு சொல்லிருக்காரு. எனினும், அந்த பெரிய ப்ரொடக்‌ஷன் டீம் அஸ்வின் கேட்ட மாறியே ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்காங்க .

அடுத்தநாள், சொன்ன மாறியே இயக்குனர் காலையிலருந்து சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணிருக்காங்க. ஆனா, அஸ்வின் வரவே இல்ல. இதையடுத்து, ஏங்க வரலன்னு கேட்டபோது, இல்ல இப்போ எனக்கு மூட் ஆப்-பா இருக்கு நான் நாளைக்கு வந்து கதை கேட்குறேன் சொல்லி மறுத்துருக்காரு. என்னடா இன்னும் பெரிய படங்கள் பண்ணி பெரிய ஹீரோவா கூட வரல அதுக்குள்ள அஸ்வின் இப்படி பன்றாருனு அந்த ப்ரொடக்‌ஷன் டீம் வருத்தத்தில் இருக்காங்களாம். 
 
இப்போ அஸ்வின் விட்ட கதைய கவின் பண்ண போறாராம். ஒரு பெரிய ப்ரொடக்‌ஷன் டீம்மோடு இணைந்திருக்காரு கவின் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனா, நிச்சயமா அஸ்வினோட இந்த கேரக்டரால நிறைய படங்களை விடபோறாருனு கோலிவுட் வட்டாரத்தில் சொல்றாங்க.

இப்படி இயக்குனரை கதை கேட்க வரவழைத்து பின் மறுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.