அண்ணாத்த பட ரிலீஸை முன்னிட்டு 1 ரூபாய்க்கு தோசை விற்பனை - ரஜினி ரசிகர்

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.

அண்ணாத்த பட ரிலீஸை முன்னிட்டு 1 ரூபாய்க்கு தோசை விற்பனை - ரஜினி ரசிகர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் இன்று ரிலீசானதை ஒட்டி திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 1 ரூபாய்க்கு தோசை விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் கர்ணன். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் ராம்ஜி நகர் பகுதியில் அண்ணாமலை என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று அண்ணாத்த திரைப்படம் வெளியானதால் அது தொடர்பான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில் தனது ஹோட்டல் முழுவதும் அண்ணாத்த பட போஸ்டர்களை ஒட்டி வாடிக்கயாளர்களுக்கு உணவு விலையில் சலுகைகள் அளித்திருக்கிறார். வழக்கமாக தனது கடையில் ரூ.20-க்கு விற்கப்படும் தோசையை இன்று ஒரு நாள் மட்டும் அவர் ரூ.1 க்கு விற்பனை செய்கிறார்.