ரவுடி பேபியாக மாற போகும் ஹன்சிகா... வேற லெவல் அப்டேட்

கோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா,அடுத்ததாக ‘ரவுடி பேபி’யாக களமிறங்கி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ரவுடி பேபியாக மாற போகும் ஹன்சிகா... வேற லெவல் அப்டேட்

கோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஹன்சிகா,அடுத்ததாக ‘ரவுடி பேபி’யாக களமிறங்கி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி,அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களான விஜய்,

சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வந்தார். தற்போது இவர் கைவசம் மஹா, 105 மினிட்ஸ் ஆகிய படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய ராஜா சரவணன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படத்துக்கு ‘ரவுடி பேபி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியுள்ள பாடலுக்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.