அல்லு அர்ஜுன் நடிக்கும் ' புஷ்பா ' திரைப்படம் ரிலீஸ் அப்டேட் இதோ 

அல்லு அர்ஜுன் நடிக்கும் ' புஷ்பா ' திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அல்லு அர்ஜுன் நடிக்கும் ' புஷ்பா ' திரைப்படம் ரிலீஸ் அப்டேட் இதோ 

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 5 மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக உருவாகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்தின் முதல் பாகத்தை இந்தாண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் கரு ”சட்டவிரோதமாக வனத்தில் சந்தன மரங்களையும் , செம்மரங்களையும் வெட்டி லாரியில் எடுத்துச் செல்லும் கடத்தல்காரனின் வாழ்வைச் சொல்லும்” திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.