கமல்ஹாசன் குணமடைய இளையராஜா வாழ்த்து..!

நலமாக வர வேண்டும் சகோதரரே என டிவீட்..!

கமல்ஹாசன் குணமடைய இளையராஜா வாழ்த்து..!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் குணமடைய வேண்டி, இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் விரைந்து குணமடைய வேண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் பூரண நலம் பெற வேண்டும் என, இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நலமாக வர வேண்டும் சகோதரரே என்றும், ஆஹா என கலை உலகை ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.