எப்போது திருமணம்..? ஃபர்ஸ்ட் இவருக்கு நடக்கட்டும்.. சிம்புவை வம்பிழுத்த ஜெய்

 எப்போது திருமணம்..? ஃபர்ஸ்ட் இவருக்கு நடக்கட்டும்.. சிம்புவை வம்பிழுத்த ஜெய்


சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜெய் பேசியதாவது;

 பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார் ஜெய்.

 பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்களில் நடிகர் ஜெய். இதுதவிர பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி-க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.