ரெட்ரோ ஸ்டைலில் வெளியானது ‘ஜிகர்தண்டா டூப்ளெக்ஸ்’ டீசர்...

ரெட்ரோ ஸ்டைலில் வெளியானது ‘ஜிகர்தண்டா டூப்ளெக்ஸ்’ டீசர்...

2014-ம் ஆண்டில் யாரும் எதிர்பாராத விதத்தில் வெளியான ஒரு வித்தியாசமான படம் தான் “ஜிகர்தண்டா”. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் மிகவும் சிறப்பாக ரசிகர்களைக் கவந்திழுத்த நிலையில், அந்த படம் மூலம் பலருக்கும் பெரும் பேர் கிடைத்தது.

தமிழில் உருவாகி, பின், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இந்திய அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் குறித்த் அதகவ்லால் இணையமே பெரிதாக பெரியளவில் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | காமெடி, மேனரிசம் எதுவும் வொர்க்அவுட் ஆகாததால் அவுட்டான நாய் சேகர்

இந்நிலையில் இன்று அந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ஜிகர்தண்டா டூப்ளெக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், எஸ்.ஜே. சூரியா மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளனர். வித்தியாசமாக ரெட்ரோ ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த டீசரைக் கண்டு மகிழுங்கள்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...