"அங்கிள் அங்கிள் அடுத்த படம் எப்போ?" அப்டேட் கொடுத்த லெஜெண்ட்!!

"அங்கிள் அங்கிள் அடுத்த படம் எப்போ?" அப்டேட் கொடுத்த லெஜெண்ட்!!

தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகர்களுள் ஒருவரான தி லெஜெண்ட் சரவணன் (அருள் சரவணன்) தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

பொதுவாகவே, பிரபல நிறுவனங்களின் நிறுவனர்கள் பொது வெளியில் தலை காட்டுவது அரிது. ஆனால், சரவணா ஸ்டார்ட்ஸ் நிறுவனர் அருள் சரவணன் இதற்கெல்லாம் மாறுபட்டவராய் திகழ்ந்தார். தன்னுடைய நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்களிலும் விதவிதமான தோற்றங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே, இந்த பிரபலம் போதவில்லை என நினைத்த லெஜெண்ட் சரவணன், தன்னுடைய விளம்பர படங்களின் இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோரின் இயக்கத்தில், தி லெஜெண்ட் சரவணன் என்ற படத்தில் நடித்து சினிமா உலகத்திற்கு எண்ட்ரி கொடுத்தார்.

தி லெஜெண்ட் சரவணன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்றாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்க தவறவில்லை. அதன் பின்னர், ரசிகர்களின் மத்தியில் கூடுதல் பிரபலமானார் லெஜெண்ட் சரவணன். 

77 வது சுதந்திர தினமான இன்று, குழந்தைகளுடன் கொண்டாடிய கையோடு, தனது அடுத்த படத்திற்கான அப்டேடை வெளியிட்டுள்ளார். இதற்காக, குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் இனிப்புகள் வழங்கி முதலில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் பேசிய அவர், "குழந்தைகள் அனைவரும் தாய் தந்தை சொல்வதை கேட்டு, அவர்களை மதித்து வாழ வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் அவர்களை விட நமக்கு நல்லது செய்வதற்கு வேறு யாருமில்லை. அதனால் அவர்களை மதித்து வாழ்ந்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும். அதே போல், ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் பேச்சைக் கேட்டு, கவனமாக படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும்" என அறிவுரைகள் வழங்கினார்.

அதன் பின்னர் கூட்டத்தில் ஒரு குழந்தை, "அங்கிள் உங்க லெஜெண்ட் படத்தை பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அடுத்த படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க" என்று கேட்க. அதற்கு பதிலளித்த அவர் " ரொம்ப நாட்களாக ஒரு நல்ல கதைக்கு காத்திருந்தேன். அதற்கு பலனாக ஒரு நல்ல கதை கிடைத்துள்ளது. விரைவில், அதற்கான பணிகளை தொடங்கிவிடலாம்" என தனது அடுத்த படத்திற்கான அப்டேடை வெளியிட்டார்.

அதன் பின்னர், குழந்தைகள், ஒரு நடனம் ஆடும்படி கேட்டதால், குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு ஆட்டத்தை போட்டு, சுதந்திர தின கொண்டாட்டத்தை முடித்தார்.

இதையும் படிக்க || "நாங்குநேரி சம்பவம் நடந்த பிறகும், முதல்வர் வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்" அண்ணாமலை பேச்சு!!