மீண்டும் களைகட்ட தயாராகும் மாமல்லபுரம்; சர்வதேச காற்றாடி திருவிழா அறிவிப்பு!

மீண்டும் களைகட்ட தயாராகும் மாமல்லபுரம்; சர்வதேச காற்றாடி திருவிழா அறிவிப்பு!

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா அடுத்த மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இரண்டாவது ஆண்டாக காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வட மாநிலங்களில் நடத்தப்படும் இந்த  காற்றாடித் திருவாழா கடந்த ஆண்டு முதன்முதலாக தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15 ஆம் தேதி வரை பட்டம் விடும் திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றாடித் திருவிழாவில் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர். வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்க விடப்பட உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வரும் காற்றாடிகளில் ட்ராகன், யானை, குதிரை போன்ற உருவங்கள், கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட காற்றாடிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல வண்ணங்களில் நான்கு நாட்கள் இந்த காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது. 3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க  |  ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; "அதை நீங்கள் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்" ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதில்!.