எல்லாரும் கொஞ்சம் வாயா மூடுறீங்களா..? சமந்தாவுக்கு பதிலளித்த நாக சைதன்யா

எல்லாரும் கொஞ்சம் வாயா மூடுறீங்களா..? சமந்தாவுக்கு பதிலளித்த நாக சைதன்யா

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி பட டிரைலர் வெளியான நிலையில், நடிகை சமந்தா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர்  வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

டிரைலரை நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் பகிர்ந்த சமந்தா, சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

அதற்கு ஒரு சில ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் சமந்தா அதற்கு பதிலளிக்கவில்லை.

இதனையடுத்து சமந்தாவுக்கு நாக சைதன்யா ரீ ட்வீட் செய்து, நன்றி தெரிவித்தார். முன்னதாக இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.